ttv dinakaran speech in r.k.nagar

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தாவது டெபாசிட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ்ன் லட்சியமாக உள்ளது என டி.டி.வி.தினகரன் மதிரடியாக பேசியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இதில் களமிறங்கியுள்ளன. அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இந்த இடைத் தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு என்ற தனியார் அமைப்பு நடத்திய கரத்துக் கணிப்பில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இந்நிலையில் ஆர்,கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தீவிர தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் ஆவடி குமார் தனது காரில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி தொகுதிக்குள் நுழைந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக குற்றம்சாட்டினார்.

அவர் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளத என கேள்வி எழுப்பிய தினகரன், அமைச்சர் மணிகண்டன் தொகுதிக்குள் ஒரு ரௌடி போல நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் முருகன் மற்றும் கேமராமேன் சல்மான் ஆகியோரை அமைச்சரே தாக்கியதாக குற்றம்சாட்டிய அவர் மணிகண்டன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திளார்.

வாக்காளர்கள் தனக்கு பெருமளவு ஆதரவு தருவதால், வெற்றிபெறும் நோக்கில் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருவதாக கூறிய அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்கவேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது கருத்துக்கணிப்பில் 3 ஆவது இடத்தில் உள்ள அதிமுக, டெபாசிட் கூட வாங்காது என தினகரன் தெரிவித்தார்.

நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டம் போட்ட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தாவது டெபாசிட்டை வாங்க வேண்டும் என பேசியதாக தினகரன் குறிப்பிட்டார்.

தற்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தான் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்கப்போவதாக கூறினார். இரட்டை இலையில் ஒரு இலையில் எம்ஜிஆர், மற்றொரு இலையில் ஜெ, இருந்த நிலையில் தற்போது பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் போல, இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் உள்ளதாக அதிரடியாக பேசினார்.