முதல்வர் நாற்காலியை இறுக்கமாக பிடித்து கொண்டு இரங்க மாட்டேன் என எடப்பாடி பிடிவாதம் பிடிப்பதாகவும், ஆதலால் தூக்கி எறிய வேண்டியது தான் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவால் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் எடப்பாடி. அன்று அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சேர்ந்து எடப்பாடியை முதமைச்சராக தேர்வு செய்தனர். 

அன்று முதல் இன்று வரை முதலமைச்சர் என்ற பதவி நாற்காலியை தக்கவைத்து கொள்ள படாத பாடு பட்டு வருகிறார். பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து முதலமைச்சராக நீட்டித்து வருகிறார். 

தங்கள் அணியில் இருந்தே தம் நாற்காலிக்கு போட்டி போட்டதால் டிடிவி தினகரனை ஓரங்கட்டிவிட்டு ஒபிஎஸ்ஸை இணைத்து கொண்டார். 

ஊழல் அரசு என்றும் தர்ம யுத்தம் என்றும் தெருவுக்கு தெரு கத்தி வந்த ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்து வாய் பூட்டு போட்டார் எடப்பாடி. 

ஒவ்வொரு எதிரிகளையும் தமது நிர்வாக திறமையால் கட்டுப்படுத்தி நாற்காலியை தக்கவைத்து கொண்டுள்ளார். 
தற்போது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பெருன்பான்மை குறைந்துள்ளபோது ஆட்சியை தக்கவைத்து வருகிறார். 

டிடிவி தரப்பும் எதிர்கட்சிகள் தரப்பும் எவ்வளவோ கூக்குரலிட்டும் இதுவரை அசைத்து பார்க்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

பொறுத்து பொறுத்து பார்த்த டிடிவி தாமே களத்தில் இறங்குவது என முடிவெடுத்து ஆளுநரை சந்தித்துள்ளார். 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி முதல்வர் நாற்காலியை இறுக்கமாக பிடித்து கொண்டு இரங்க மாட்டேன் என எடப்பாடி பிடிவாதம் பிடிப்பதாகவும், ஆதலால் தூக்கி எறிய வேண்டியது தான் எனவும் தெரிவித்தார். 

மேலும், எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும் முதல்வரை மாற்றுவதே எங்கள் கோரிக்கை எனவும் குறிப்பிட்டார்.