TTv dinakaran show his power at Theni

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அந்த வகையில் கட்சியும், கட்சியின் அலுவலகமும் அவரது கண்காணிப்பில் உள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் கெத்து காட்டுகிறார்கள். 

ஆனால் அதேவேளையில் பன்னீரின் சொந்தமாவட்டமான தேனியில் கட்சியின் அலுவலகம் அவரது கையிலோ, கட்டுப்பாட்டுக்குள்ளோ இல்லையாம். முழுக்க முழுக்க டி.டி.வி.யின் செல்லப்பிள்ளையான தங்க தமிழ்செல்வனின் கட்டுக்குள் உள்ளதாம். டி.டி.வி. இதைச் சொல்லிக்காட்டி ஓவர் உதார் விடுகிறாராம் அடிக்கடி. 

அதை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பன்னீரின் ஆட்கள் அவரிடம் கேட்டபோது “அந்த எடத்த நாமதான் காசு போட்டு வாங்கினம்பே. ஆனா அம்மா அந்த இடத்தை அவரோட உதவியாளர் பெயர்ல பத்திரப்பதிவு பண்ணிட்டாங்க. 

அந்த உதவியாளரோ அவுக அணியில (டி.டி.வி. அணியில்) இருக்கிறாரு. இப்போ போயி நின்னு நாம பிரச்னை பண்ணினோமுன்னாக்க, டாக்குமெண்ட்ஸை கேப்பாக. அது அவுக கையிலதான் இருக்கும், உரிமையும் அவுகளுக்குதேன் இருக்குதுன்னு நிரூபணமாகுறப்ப நாம தலை குனிய வேண்டியிருக்கும். தேவையா இந்த அவமானம்? 

இருப்போம்பே, பொறுமையா இருப்போம். நல்ல காரியங்க சீக்கிரம் நடக்கும்.” என்று சாந்தப்படுத்தினாராம். 

பன்னீருன்னா சும்மாவா?!