ttv Dinakaran said that it is not good to talk in the tone of intimidation that he is the chief minister of Sasikala
சசிகலாவால் முதலமைச்சராகிவிட்ட எடப்பாடி பழனிசாமி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி என மிரட்டும் தொனியில் பேசுவது அழகல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பத்து மாசம் வனவாசம் போனவர் டிடிவி எனவும், ஒரே நாளில் மளமளவென தேர்ந்தெடுக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக அமர்ந்த கூத்து இங்கேதான் நடக்கும் எனவும் விமர்சித்தார்.
இது எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சி எனவும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
நாங்களே கட்சிக்காக கஷ்டப்பட்டோம் எனவும், 9 முறை யாருடைய சிபாரிசும் இல்லாமல் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளராக நின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
ஆட்சியை கவிழ்க்க நடைபெறும் சதி பலிக்காது எனவும் டிடிவி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவால் முதலமைச்சராகிவிட்ட எடப்பாடி பழனிசாமி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி என மிரட்டும் தொனியில் பேசுவது அழகல்ல என தெரிவித்தார்.
2001 முதல் 2010 வரை எம்.பி.ஆக இருந்தேன் எனவும் 25 ஆண்டுகளாக சென்னையில் தான் இருந்து வருகிறேன் என்பது எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
முதல்வராகுமாறு சசிகலா காலில் விழுந்தவர் திண்டுக்கல் சீனிவாசன் எனவும், வெல்லமண்டி நடராஜன் போன்றோருக்கு பதவி கொடுத்தவர் சசிகலா தான் எனவும் தெரிவித்தார்.
