Asianet News TamilAsianet News Tamil

நீட்டை எதிர்த்து 9 ஆம் தேதி கருப்பு கொடி..!!! - டிடிவி அதிரடி...

ttv dinakaran protest announcement against neet exam on september 9
ttv dinakaran protest announcement against neet exam on september 9
Author
First Published Sep 5, 2017, 1:42 PM IST


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 9 ஆம் தேதி அதிமுக அம்மா அணியினர் போராட்டம் நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவி அனிதாவின் டாக்டர் கனவை நீட் பறித்துக்கொண்டதால்  தற்கொலை செய்து கொண்டார். இதனால்  தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் 2 வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்த நாள் குறித்து வருகின்றனர். 

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் அதிமுக அம்மா அணி சார்பில் வரும் 9 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

MBBS மாறட்டும் BDS  படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வை அறிவித்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துள்ளது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு திறமை இருந்தும் மத்திய அரசு நடத்தும் இந்த நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் குழுமூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த ஏழை மாணவி அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் நீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவரால் தனது மருத்துவ கல்வி வாய்ப்பினை இழந்த அவலத்தகையும் அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தையும் கண்டு தமிழகமே வெதும்பி நிற்கிறது. 

மாநில அரசின் உரிமைகளை பறித்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தகர்க்கும் மத்திய அரசின் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கும் மத்திய அரசின் இந்த செயலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை இனி தொடரக்கூடாது, நம்முடைய இந்த உணர்வுகளை மத்திய அரசுக்கு புரியவைக்கும் வகையில்  அதிமுக அம்மா மாணவர்கள் அணி சார்பில் சென்னையில் வரும் 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே நீட்க்கு எதிராக நடைபெறும்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா அணி மாணவர்கள், அம்மாவின் விசுவாசிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் என எல்லோரும் கலந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios