ttv dinakaran peravai started

இனி அதிமுக என்றால் தினகரன்தான் என்று சொல்லும் அளவுக்கு கட்சிக்குள் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பல வழிகளில் முயன்று வருகிறார் டி,டி,வி,தினகரன்.

கட்சியில் தங்கள் கரங்கள் தளர்ந்து விடாமல் இருக்க, தமிழக முழுவதும் உள்ள கட்சியினரைக் கொண்டு, ஆங்காங்கே டி.டி.வி.பேரவையை அமையுங்கள் என, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் தமிழகம் முழுவதும் டி.டி.வி. பேரவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலராக இருந்தும் தன்னையும், சசிகலாவையும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறி, ஒட்டுமொத்த அமைச்சர்களும் நெருக்கடி கொடுத்ததில், மிகவும் கடுப்பானார் தினகரன்.

இரட்டை இலையை திரும்பப் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி போலீசார், தன்னை கைது செய்த போது கட்சியினர் மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்த்த தினகரனுக்கு புகழேந்தியும் , நாஞ்சில் சம்பத்துமே விமான நிலையம் வந்திருந்தது தினகரனை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

அமைச்சர்களோ முக்கிய, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக கொந்தளிப்பர் என, தினகரன் எதிர்பார்த்தார்.]

தன்னால் பலன் அடைந்தவர்கள், விமான நிலையத்துக்கு பெரும் திரளாகக் கூடியிருந்தால் கூட, அவருக்கான செல்வாக்கை உணர்ந்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் என் மீது கடுமை காட்டாமல் இருந்திருப்பார்கள் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தமிழகத்தில் தனக்கு பெரிய ஆதரவு இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும், டி.டி.வி.தினகரன் பேரவையை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகத்தான் மதுரையில் அண்மையில் நடைபெற்ற டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான போராட்டம் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் பேரவை துவக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.