ttv dinakaran meets mookkupodi sitthar
திருவண்ணாமலையில் இருக்கும் மூக்குப்பொடி சித்தரை சந்தித்து, டி.டி.வி. தினகரன் ஆசி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.டி.வி.தினகரன் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தரை நேற்று திடீரென சந்தித்தார்.
திருவண்ணாமலையில் இருக்கும் க்குப்பொடி சித்தர், பச்சை நிறத்தில் பெரிய சால்வையை போர்த்திக் கொண்டு மவுனமாகவே அமர்ந்திருப்பார். மூக்குப்பொடி போடுவதால் அவருக்கு மூக்குப்பொடி சித்தர் என்ற பெயர் வந்தது.

அவரை தரிசிக்க செல்வந்தர்கள் மூக்குப்பொடியை வாங்கிக் கொண்டு அவர் அருகில் வைத்துவிட்டு நீண்ட நேரமாக காத்திருந்து ஆசி பெறுவார்கள். எப்போதும் குனிந்த தலையுடனேயே இருக்கும் மூக்குப்பொடி சித்தர் நம்மை நிமிர்ந்து பார்த்துவிட்டால் யோகம் அடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் தினகரன் நேற்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆகாஸ் ஓட்டலில் சித்தர் கீழ்தளத்தில் ஓரமாக அமர்வது வழக்கம்.
அவரை தினகரன் நேரில் சென்று கும்பிட்டார். பின்னர் அவர் முன்னால் சற்று தூரத்தில் அமர்ந்து ஆசி பெற்றார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்த தினகரன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
