ttv dinakaran meeting with supporters

கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக வரும் 5 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லப் போவதாக அறிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் தினகரன் இல்லத்திற்கு காலை 11 மணியில் இருந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினகரன், இரு அணிகள் இணைவது தொடர்பாக 60 நாள் கெடு விதித்திருந்தார் அது நாளையுடன் முடிவடைகிற நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

நாளை மறுநாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது கட்சி பணியை தொடர்வதாக தெரிவித்திருந்தார் இது குறித்தும் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.