ttv dinakaran meeting with mla
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரனிடைய நடைபெறும் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. இருவரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவில் அதிகாரப்போட்டி காரணமாக இவர்களிடையே நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், டிடிவி தினகரனை நீக்கி தீர்மானம் போடப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், கட்சியில் இருந்த நீக்க முடியாது என்றும் நேற்று பேட்டி அளித்திருந்தார்.

டி.டி.வி. தினகரன், தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடையே பேசும்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது என்று கூறினார்.
கட்சிக்கு யார் தேவை, யார் தேவையில்லை என்பதை கட்சியின் பொது செயலாளர்தான் முடிவு செய்ய முடியும் என்றார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, ரங்கசாமி, தங்கத்தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
