TTV Dinakaran is coming to the hotel today - Thanga Thamilselvan
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்ர் பதவியும், மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக ஆளுநரை சந்திக்க அவர்கள் அனுமதி கேட்டுள்ளனர். அப்படி ஆளுநரிடம் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்றால் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன், இன்று புதுச்சேரிக்கு வர உள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் சந்தித்த பிறகு, விரைவில் ஆளுநரை சந்திப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
