ttv dinakaran in egmore court
ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்துக்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல், 'பரணி பீச் ரிசார்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு மற்றொரு வழக்கும் தொடர்ந்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. டி.டி.வி.தினகரன், கோர்ட்டில் ஆஜரானார். இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி வரும் 24ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறினார்.
