ttv dinakaran has categorically stated that we have not made any mistake.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்தார்கள் எனவும் நாங்க எந்த தவறும் பண்ணவில்லை எனவும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 75 நாட்களாக சிறையில் இருந்த அவரை பார்க்க சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலை கொண்டது. இதனிடையே ஜெயலலிதாவை சந்தித்தாகவும் அவர் உணவு உட்கொண்டதாகவும் அமைச்சர்கள், செய்திதொடர்பாளர்கள் என அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஜெ இடத்திற்கு சசிகலா பிடிக்க முற்பட்டார். அதன்படி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆதே போன்று ஆட்சியையும் பிடிக்க முயன்றார். இதனால் ஒபிஎஸ் ஆத்திரம் அடைந்து கட்சியை உடைத்தார்.
இதையடுத்து சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கினார்.
ஆனாலும் ஆர்.கே.நகர் மக்கள் மத்தியில் ஜெயித்து காட்டுவேன் என துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் சபதம் எடுத்தார். அதன்படி இன்று எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்தார்கள் எனவும் நாங்க எந்த தவறும் பண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை எனவும் மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சியும் அதிகாரமும் கையில் இருப்பதால் நீடிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லை எனவும் ஜெயலலிதா கேட்டதால் சசிகலா வீடியோ எடுத்தார் எனவும் சசிகலாவிடம் இருந்து வீடியோவை நான் தான் வெற்றிவேலிடம் கொடுத்தேன் ,அவர் எங்களையும் மீறி வீடியோ வெளியிட்டார் எனவும் குறிப்பிட்டார்.
