சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தினகரன் கலந்துக்க கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய டிடிவி, சசிகலா அவர்கள் சொன்னதால் தான் பல வேலைகளுக்கு நடுவே இந்த  நிகழ்வில் கலந்துகொள்ள வந்தேன் என கூறி மேடையிலேயே கண் கலங்கினார் 

சசிகலாவின் கணவர் ம.நடராசன் இறந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அதனையொட்டி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் டி.டி.வி.தினகரன், கி.வீரமணி, கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


 
இதற்கிடையில் உரை நிகழ்த்திய டிடிவி, "பல வேலைகளுக்கு நடுவே நான் சித்தப்பாவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உள்ளேன். எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என நடராசனின் துணைவியாரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான சசிகலா, என்னிடம் தெரிவித்து இருந்தார் என சொல்லும் போதே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். 

தேர்தலை சந்திப்பது, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை என பல விஷயங்கள் மும்முரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வேறு ஏதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் வேறு எதுவும் பேசாமல் நன்றி சொல்லிக்கொண்டு உடனடியாக விடைபெற்றார் டிடிவி.