நேற்று, திமுக அதிமுகவிற்கு முன்னதாக  எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அறிவித்தார் தினகரன். திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவராகவும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருப்பதனாலும், கடந்தமுறை டிஆர்பி ராஜாவிடம் இவர் தோற்றது வெறும் 8,200  வாக்குகள் தான், திருவாரூர் பகுதியில் மிகவும் பிரபலமான நபர் என்பதால், உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் எப்படியும் இவர் ஜெயித்துவிடுவார். அதுமட்டுமல்ல, டப்பு புழங்கும் கை என்பதால் தேர்தல் செலவுகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் காமராஜையே வேட்பாளராக்கியிருக்கிறார் தினகரன்.

இதனையடுத்து இன்று திருவாரூர் இடைத் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் அவரசரை அவசரமாக வேட்பாளரை அறிமுகப்படுத்திய  திமுக தலைவர் ஸ்டாலினும்  அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் கருத்துக்களை கேட்க வேண்டுமென  வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி  தினகரன், “அமமுக வேட்பாளர் காமராஜ் வெற்றிபெற்றுவிடுவார் என்ற அச்சத்தில் ஆர்.கே.நகரில் எப்படி தேர்தலை ரத்து செய்தார்களோ அதுபோல ரத்து செய்யப் பார்க்கிறார்கள். திருவாரூர் இடைத் தேர்தலை கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் பயந்து நீதிமன்ற படிக்கட்டை மிதித்துள்ளனர். 

இதனால்தான் இடைத் தேர்தல் குறித்து முன்னதாகவே கி.வீரமணியையும், திருமாவளவனையும் பேசவைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்த மாரிமுத்து யார் என்று விசாரித்தால், திமுக தொடர்பில்தான் அவர் சென்றிருக்கிறார். அடுத்த நாளே திமுகவுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி மனு அளிக்கிறது. ஆனால் தேர்தல் நடைபெறும், நாங்கள் அதில் மாபெரும் வெற்றிபெறுவோம்” என்று தெரிவித்தார்.