ttv to chennai

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் வீட்டில் இன்று சோதனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சென்னையில் வைத்து விசாரணை நடத்துவதற்காக தினகரனுடம் டெல்லி போலீஸ் டீம் சென்னை புறப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸுக்கு அனுமதி கிடைத்தது.

இதையடுத்து விசாரணைக்காக டிடிவி தினகரனுடன் டெல்லி போலீஸ், சென்னைக்கு புறப்பட்டுள்ளது. தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனையும் டெல்லி போலீஸ் விசாரணைக்காக சென்னை அழைத்து வருகிறது.

இதேபோல் கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதனிடையே சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று ள்ளனர். இதையடுத்து இன்று டி.டி.வி.தினகரனின் வீட்டில் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது