Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது... உச்சநீதிமன்றம் அதிரடி..!

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தினகரன் கட்சிக்கு குக்கர் சிக்கத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ttv dinakaran cooker symbol There is no
Author
Delhi, First Published Feb 7, 2019, 10:52 AM IST

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தினகரன் கட்சிக்கு குக்கர் சிக்கத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கிய அவர் குக்கர் சின்னத்தையே தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார். இந்நிலையில் சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தனக்கு தேர்தலில் குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்தார். தினகரன் கட்சிக்கு  குக்கர் சின்னம் ஒதுக்கவதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ttv dinakaran cooker symbol There is no

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு செய்தார். தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட முடியுமா? என தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தது. ttv dinakaran cooker symbol There is no

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ttv dinakaran cooker symbol There is no

இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  இது டி.டி.வி.தினகரனுக்கு   பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios