TTV Dinakaran condemns ADMK govt.

நடிகர் எஸ்.வி.சேகரை, உயர்நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழக அரசு தயங்கிறது என்றால் அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிடிவி தினகரன், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது என்றார்.

தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களைப்போல மத்திய அரசு நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நீட் தேர்வு வெளி மாநிலத்தில் நடத்தப்படும் என்று செய்தித்தாள்களில் 15 நாட்களுக்கு முன்பே வந்தபோதே நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து சோமாலியாவாக மாற்ற பார்க்கிறார்கள். நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால், நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க இடம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் எஸ்.வி.சேகரை உயர்நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழக அரசு தயங்குகிறது. ஏன் தயங்குகிறது என்றால், அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணம். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் பதவியையும் அரசையும் மட்டுமே காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.