Asianet News TamilAsianet News Tamil

தங்கமணியை முதலமைச்சராக்க தூது விட்ட நண்பர்... அடுத்து பகீர் கிளப்பிய தினகரன்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவது தற்கொலைக்கு சமமானது என்று அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

TTV Dinakaran Attack Speech
Author
Tamil Nadu, First Published Oct 5, 2018, 1:08 PM IST

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவது தற்கொலைக்கு சமமானது என்று அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக, டிடிவி தினகரனை சந்தித்துப் பேச, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாக, தங்க.தமிழ்ச்செல்வன் வெளியிட்ட தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. TTV Dinakaran Attack Speech

இந்த நிலையில், அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திகார் சிறையில் வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இந்த சந்திப்பின்போது தர்மயுத்தம் என்று கூறி நான் நடந்து கொண்டவிதம் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். எனக்கு முக்கியமான பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தூது விட்டார். எப்படியாவது, தமிழகத்தின் முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் துடிக்கிறார். முதலமைச்சராவதற்காக ஓ.பன்னீர்செல்வம் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார். என்னை சந்தித்ததை ஓ.பன்னீர்செல்வம் மறுக்க மாட்டார்.

 TTV Dinakaran Attack Speech

கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தது உண்மை. அப்போது எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவது குறித்து என்னிடம் பேசினார். 10 நாட்களுக்கு முன்பாக நண்பர் மூலம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் என்னை சந்தித்தனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறியுள்ளார்.

 TTV Dinakaran Attack Speech

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள் என்றார். அமைச்சர் தங்கமணி கூறியதற்கு அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை முதலில் வெளியிடட்டும் என கூறினார். மேலும் தங்கமணியை முதலமைச்சராக்க தூது விட்டதாகவும் அடுத்தடுத்து தினகரன் பகீர் கிளப்பியுள்ளார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசே தமிழக அரசை தாங்கிப் பிடித்து வருகிறது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios