இரட்டை இலை   சின்னத்தை பெறுவதற்காக    லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் தற்போது அதிரடியாக கைது செய்யப் பட்டு உள்ளார் . 

நான்கு நாட்களாக  நடைபெற்ற  விசாரணைக்கு  பின்னர் தற்போது  கைதாகி உள்ளார்  டிடிவி தினகரன் .மேலும் இந்த வழக்கு  தொடர்பாக  லஞ்சம்  பெற்றதாக  வாக்கு மூலம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகரா  கைதானதை  தொடர்ந்து  தற்போது டிடிவி தினகரனும்  கைது செய்யப் பட்டுள்ளார். 

கடந்த நான்கு நாட்களாக  டி டிவி தினகரனிடம்  மேற்கொண்ட  விசாரணையில், 37 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது . 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தினகரனின் நண்பர்  மல்லிகார்ஜுனாவையும் கைது செய்யப் பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.