திருவாரூர் அழகிரிக்கு !! திருப்பரங்குன்றம் தினகரனுக்கு !! உருவாகுது புதுக் கூட்டணி !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 12, Sep 2018, 11:40 AM IST
ttv dinakaran and alagiri new alliance
Highlights

திருவாரூரில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் மு.க.அழகிரிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திருப்பரங்குன்றம் தொகுதியில் தினகரன் கட்சிக்கு மு.க.அழகிரி  ஆதரவு அளிக்கப் போவதாகவும், இந்த புதுக் கூட்டணி இரண்டு தொகுதிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதி மறைவுக்கும் பிறகு அவரது மூதத மகன் அழகிரி, எப்படியாவது திமுகவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என துடித்தார். முதலில்  திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின்னர் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என தெரிவித்தார். எதற்கும் திமுக அசைந்து கொடுக்காததால் கடந்த 5 ஆம் தேதி அமைதிப் பேரணி என்ற பெயரில் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்  அழகிரி.

ஆனால் ஸ்டாலின் அழகிரியை சேர்த்துக் கொள்வதாக இல்லை என்ற  நிலைதான் தற்போது உள்ளது. இதனால் கடுப்பான அழகிரி எப்படியாவது ஸ்டாலினை கவிழ்த்துவிட வேண்டும் என முயன்று வருகிறார்.

அதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதுதான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல், இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக வேலை செய்து தோற்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அழகிரி.

அண்மையில் ஒரு நாள் அழகிரி மகன் டி.டி.வி.தினகனை தொடர்பு கொண்டு திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் தனது தந்தை அழகிரி போட்டியிட உள்ளதாகவும், நீங்கள் ஆதரவு தர முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

ஒரு நிமிடம் ஆடிப்போன தினா, யோசித்து சொல்கிறேன் என சமாளித்துள்ளார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பேசிய தினகரன், அழகிரியைத் தொடர்பு கொண்டு, திருவாரூர் உங்களுக்கு, திருப்பரங்குன்றம் எனக்கு ஓகேவா என கேட்டுள்ளார்.

இதற்கு அழகிரியும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இடைத் தேர்தல் வந்தால் பேசியபடி திருவாரூரில் அழகிரிக்கு தினகரனும், திருப்பரங்குன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்திற்கு அழகிரியும் தீவிரமாக வேலை செய்து தொகுதிகள் இரண்டையும் அடித்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளன.

இந்த புதிய காம்பினேஷன் வெற்றியை ஈட்டுமா என்பது இனி போகப் போகத்தான் தெரியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

loader