TTV Di9nakaran win
ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. 19-வது சுற்று முடிவில் தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும், தினகரன் முன்னிலை வகித்து வந்தார். அவரைக் காட்டிலும் அதிமுக பாதி அளவே ஒட்டுகள் பெற்றுள்ளது. டிடிவி தினகரன் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
வேட்பாளர் பெயர் கட்சி மொத்த வாக்குகள்
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89,013
மதுசூதனன் (அதிமுக) - 47115
மருது கணேஷ் (திமுக) - 24651
கரு. நாகராஜன் (பாஜக) - 1368
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,802
நோட்டா - 2,348
மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள திமுக, டெபாசிட் இழந்துள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட 57 கட்சிகள் தங்களது டெபாசிட்டுகளை இழந்துள்ளது. நோட்டாவில் அதில் பாதியைக் கூட பாஜக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
