Asianet News TamilAsianet News Tamil

பதற்றத்தில் பிதற்றும் இபிஎஸ்! எனக்கு லண்டனில் சொத்து இருந்தால் அரசு இதை செய்யலாம்! மாஸ் பதிலடி கொடுத்த டிடிவி

முதலில் டிடிவி. தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக அன்றைய தினமே பல்வேறு செய்திகளை வெளியிட்டது. எனவே அவருக்குச் சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார். 

TTV Dhinakaran who responded to Edappadi Palanisamy
Author
First Published Apr 17, 2023, 9:00 AM IST

எடப்பாடி பழனிசாமியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருந்தார். 

இதையும் படிங்க;- அடுத்தவர் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு காலை வாரும் கலையை கற்றவர்கள்! இபிஎஸ்-ஐ நேரடியாக அட்டாக் செய்த BJP

TTV Dhinakaran who responded to Edappadi Palanisamy

இந்நிலையில், அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி. தினகரன் கூறியிருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்;- முதலில் டிடிவி. தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக அன்றைய தினமே பல்வேறு செய்திகளை வெளியிட்டது. எனவே அவருக்குச் சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு டிடிவி. தினகரன் பதில் அளித்துள்ளார்.

TTV Dhinakaran who responded to Edappadi Palanisamy

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார். எனக்கு லண்டனில் சொத்து இருப்பதை காட்டட்டும். நானே அதை அரசிடம் ஒப்படைத்துவிடுவேன். எடப்பாடி பழனிசாமியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும், பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பேன். நல்ல திட்டங்களை வரவேற்பேன். ராகுல் காந்தி ஆதரித்த சட்டமே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் மத்திய அரசின் தலையீடு இல்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!!

Follow Us:
Download App:
  • android
  • ios