ஈரோடு இடைத்தேர்தலில் களமிறங்கும் டிடிவி. தினகரன்? இரட்டை இலை நிச்சயம் முடங்கும்? அவரே சொன்ன பரபரப்பு பேட்டி.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான திமுக கடந்த முறைற போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுகவிற்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தருவார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான திமுக கடந்த முறைற போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் அமமுகவும் போட்டியிட உள்ளதாகவும், வேட்பாளர் அறிவிப்பு ஜனவரி 27ம் தேதி வெளியாகும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனவரி 27ம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க;- ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்.. ஓபிஎஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்.. டிடிவி.தினகரன்..!
இவர்களுக்குள்ளேயே பிரச்சனை இருக்கும்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணிக்கு சாத்தியமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக இரண்டு அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பதுபோல் என தெரிவித்தார். அதிமுக இப்போது பிளவு பட்டு இருக்கிறது. இருப்பினும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் இந்த இயக்கத்தில் தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் எங்களுக்கே ஆதரவு தருவார்கள். ஆர்.கே. நகர் போலவே - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்றார்.
இதையும் படிங்க;- வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி
மேலும், பொதுவாக மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது இயற்கைதான். ஆனால், திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சி சரி இல்லை என்று தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், திமுகவினர் எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுகவிற்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.