எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் டி.டி.வி.தினகரன் அணியினர் செய்யும் அட்ராசிட்டியால் கரும் கோபத்தில் இருக்கிறாராம் முதல்வர்.  

எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் டி.டி.வி.தினகரன் அணியினர் செய்யும் அட்ராசிட்டியால் கரும் கோபத்தில் இருக்கிறாராம் முதல்வர்.

தமிழகத்தில் கோடை வெயிலை விட தேர்தல் பிரச்சார சூடு தகித்து கிடக்கிறது. தன்மானத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால் சொந்த மாவட்டமான சேலத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார். 

அதனை மனதில் கொண்டு அதிமுக நிர்வாகிகள் பல வழிகளில் வாக்காளர்களை கவர திட்டமிட்ட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக பணப்பட்டுவாடாவை நிகழ்த்தவும் தயாராகி வருகின்றனர். இதுஒரு புறம் நடக்க, முதல்வர் தொகுதி என்பதால் சேலத்தில் அவரை அவமானப்படுத்தியே ஆக வேண்டும். ஆக அங்கு அமமுக தனது பலத்தை காட்ட வேண்டுமென கருதும் அமமுகவும் கோதாவில் இறங்கி கொட்டம் அடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். டி.டி.வி அணியினரின் பார்முலா பரபரப்பை கிளப்பி வருகிறது.

அதாவது, முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடி கிராமத்திற்கு செல்லும் அமமுகவினர், கூடவே உறுப்பினர் படிவமும் எடுத்துச் செல்கின்றனர். ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க, குடும்பத்தையே உறுப்பினரா சேர்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லி விட்டு சட்டென ரூ.5 ஆயிரம் பணத்தை திணிக்கிறார்களாம்.

அப்படி உறுப்பினராக இணைபவர்களிடம் நமக்கே நமக்கே ஓட்டுப்போடுங்கள் என கேன்வாஷ் செய்து வருகிறார்கள். அதுவே அந்த குடும்பத்தில் யாராவது ஆசிரியராகவோ, அல்லது அரசு ஊழியராகவோ இருந்தால் ரூ.10 ஆயிரத்தை திணித்து வருகிறார்களாம். இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருப்பதாக தகவல். .