விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்திருக்கும், காவல் துறையினருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தேர்தல் முன்விரோதத்தினால் அய்யனார் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வருபவர்கள் மீதும், அவரது சகோதரி வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீதும். அதனை செய்தி சேகரிக்க சென்ற ஜெயா டிவி ஒளிப்பதிவாளரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட அய்யனார் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.