கட்சியை விட்டு சென்ற அவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு அவர், ’’தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. தற்போது இங்கு மழை பெய்து உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து சிலர் பிரிந்து சென்று வேறு கட்சிக்கு சென்று உள்ளனர். கட்சியை விட்டு சென்ற அவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும். அ.ம.மு.க.வில் உள்ளவர்களுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது.

முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் கட்சியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இன்று திருமணம் காணும் மணமக்கள் என்.ஏ.விஜய்ஆனந்த்- எம்.பி.யாழினி வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும்’’ என வாழ்த்தினார்.