Asianet News TamilAsianet News Tamil

மோடியை எதிர்க்க அதிரடி தயார்... இப்போதே டி.டி.வி.தினகரன் அமைத்த திடீர் கூட்டணி..!

மோடியின் சில திட்டங்களையும், கொள்கைகளையும் எதிர்த்து அரசியல் செய்ய தயாராகி விட்டார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 

TTV dhinakaran's sudden alliance to oppose Modi
Author
Tamil Nadu, First Published Jun 22, 2019, 12:09 PM IST

மோடியின் சில திட்டங்களையும், கொள்கைகளையும் எதிர்த்து அரசியல் செய்ய தயாராகி விட்டார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். TTV dhinakaran's sudden alliance to oppose Modi

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் தோல்வியால் பாஜகவுடன் சமரசமாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவை தொடர்ந்து தைரியமாக எதிர்ப்பேன் என மறைமுகமாக கூறியுள்ளார் தினகரன். காரணம், தனது படுதோல்விக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு செய்ய பாஜக முக்கியல் காரணம் என நினைக்கிறார் டி.டி.வி.

 TTV dhinakaran's sudden alliance to oppose Modi

இந்நிலையில், மக்களவை தேர்தலின் போது அமமுகவுடன் கூட்டணி வைத்த எஸ்டிபிஐ கட்சி ஏற்பாடு செய்த விழா ஒன்றில் பங்கேற்ற டி.டி.வி, ’’தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழர்களின் உரிமைக்காக, பாதுகாப்புக்காக எப்படி நமது சகோதரர் திருமுருகன் காந்தி போன்றவர்கள், பெரியவர் பழ நெடுமாறன் போன்றவர்கள் தேர்தல், சுயநலம் எதிர்பார்க்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதுபோல, இதுபோன்ற நண்பர்களுடன் அமமுக அரசியலைத் தாண்டி தமிழக நலனுக்காக தமிழக பாதுகாப்புக்காக, தைரியமாக எந்த ஒரு சக்தியையும், அது யாராக இருந்தாலும் சிறிதும் பின்வாங்காமல், எதிர்த்துப் போராடுவோம்.TTV dhinakaran's sudden alliance to oppose Modi

தமிழகத்தின் நலனை மாத்திரம் நலனில் கொண்டு, தமிழ்நாட்டில் எந்த வித மதவாதமும் தலை தூக்க விடாமல், சகோதர சகோதரிகளாக சாதி மத பேதமற்ற தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற அமமுக என்றும் துணிச்சலுடன் போராடும்’’ என அவர் தெரிவித்தார். இந்த விழாவில் திருமுருகன் காந்தி, பழ நெடுமாறன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். திருமுருகன் காந்தி, பழ.நெடுமாறன் ஆகிய இருவருமே மோடியை பற்றியும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவர்கள். அவர்களுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்க டி.டி.வி.தினகரன் களமிறங்கும் திட்டத்தில் உள்ளதை அவரது பேச்சு உணர்த்துகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios