விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியில் டி.டி.வி.கட்சியின் அமமுக வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கு மீண்டும் சீட் வழங்கலாமா என டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக யோசித்து வருகிறது. இந்நிலையில் முந்திக் கொண்டு அதிமுக வேட்பாளரை இலை கட்சி அறிவித்து விட்டது. அதிமுகவில் இபிஎஸ் ஆதரவு வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ சின்னப்பனுக்கு சீட் கொடுக்கப்பட்டதை ஓ.பி.எஸ் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏவான மார்கண்டேயனால் ஏற்றுக்கொள்ளஃ முடியவில்லை. தற்போது எடப்பாடி ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் கிடைத்ததால், அதிருப்தியான மார்கண்டேயன் நேற்று கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் அவர் விளாத்திகுளத்தில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமமுக மார்கண்டேயனுக்கு வலை விரித்துள்ளது. 

அவரை கட்சிக்கு கொண்டு வந்து அமமுக சார்பில் விளாத்திகுளத்தில் போட்டியிட வைத்து வெற்றிபெற வேண்டுமென டி.டி.வி.தினகரன் திட்டம் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தர்தல் ஃபார்முலாவை அமமுக கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலை கண்டு கொள்ள வேண்டாம்.

இடைத்தேர்தலுக்கு செல்வாக்குள்ள நபர்களை நிறுத்து பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுக்கலாம் என சிறையில் இருந்து சசிகலா உத்தரவிட்டு இருக்கிறாராம். ஆக, அமமுகவில் சீட் கிடைக்கும் என டி.டி.வி.தினகரனை நம்பி வந்து பதவியை இழந்து காத்திருந்த உமா மகேஸ்வரிக்கு விளாத்திகுளத்தில் கல்தா கொடுக்க தயாராகி விட்டார் டி.டி.வி.தினகரன்.