Asianet News TamilAsianet News Tamil

ரிசார்ட்டில் நடந்த டி.டி.வி.தினகரன்- பூண்டி துளசி வாண்டையார் வீட்டு நிச்சயதார்த்தம்..!

சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது. மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் கடந்த 1991–96லில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 

TTV Dhinakaran-Poondi Thulsi Vandayar home engagement held at the resort ..!
Author
Tamil Nadu, First Published Nov 12, 2020, 11:40 AM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டி.டி.வி.தினகரனின் ஒரே மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. TTV Dhinakaran-Poondi Thulsi Vandayar home engagement held at the resort ..!

இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.திகனகரனின் சகோதரன் பாஸ் என்கிற பாஸ்கரன் உட்பட இரண்டு குடும்பத்தாரின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது. மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் கடந்த 1991–96லில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் நேற்று நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தன் ஒரே செல்லமகளான ஜெயஹரிணியை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என தினகரன் நினைத்தார்.TTV Dhinakaran-Poondi Thulsi Vandayar home engagement held at the resort ..!

தொடக்கத்தில் மணமகன் தரப்பில், தன் மகளை பெண் கேட்டு அணுகியபோது தினகரன் உடனே அதை சசிகலாவிடம் தெரிவித்தார். துளசி அய்யா மீது பெரும் மதிப்புகொண்ட சசிகலா இரட்டிப்பு சந்தோஷம் அடைந்ததுடன், உடனே அதற்குச் சம்மதம் தெரிவிக்க, அடுத்தடுத்த நகர்வுகள் நடந்து முடிந்தன.

சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டதால், அவர் தலைமையிலேயே நிச்சயதார்த்த விழாவை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்புகள் கைகூடவில்லை என்பதை உணர்ந்த தினகரன், நிச்சயதார்த்த விழாவை எளிமையாக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios