இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், ’’சண்டைக்கு பயந்தவனுக்கு கண்டதெல்லாம் காரணமே...  உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி , பேரூராட்சி தலைவர் கவுன்சிலர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் முறையை கழக அரசு அறிவித்திருக்கிறது. மேயர் உள்ளிட உள்ளாட்சி பதவிகளுக்கான நிர்வாகிகளை மறைமுக வாக்களிப்பின் படி தேர்வு செய்யும் முறை, வரும் தேர்தலில் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அரசானை வெளியிட்டிருக்கிறது. 

இது ஒன்றும் புதிய முறை அல்ல. திமுக தனது ஆட்சிக்காலத்தில் கடைபிடித்த அதே பழைய மறைமுக வாக்களிப்பு திட்டம் தான் இது. அம்மா இருந்தபோது நடத்தியிருக்க வேண்டிய உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல்களில் இதே அடிப்படைதான் பின்பற்றப்பட இருந்தது. இப்படி இருக்க ஏதோ புதியதோர் தேர்தல் முறையை அதிமுக அரசு கொண்டு வந்து திணிப்பது போல திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூப்பாடு போடுவது அவர்களது தோல்வி பயத்தையே காட்டுகிறது. 

இதில் என்ன கொடுமை என்றால் பூத் ஏஜெண்டு போடுவதற்கே ஆள் இல்லாத கம்பெனியான ஆமமூக்கன் கட்சியின் அதிபடும் ஏகத்துக்கும் கூவுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்ட முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற் உறுப்பினர்கள் தான் முதலமைச்சரை மக்களே நேரடிடாக தங்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுப்பது கிடையாது.

 

அதுபோலவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் பிரதமரை மக்களின் நேரடி வாக்குகளின் மூலம் தேர்வு செய்யப்படுவதில்லை. அதுபோலத்தான் இப்போது மேயர்கள் நகராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மறைமுக வாக்களிப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்றால், இதில் கூப்பாடு போடுவதற்கு என்ன இருக்கு?

 

சண்டைக்கு பயந்தவன் சட்டையிலே பட்டன் இல்லை என்று சாக்கு சொல்லி தப்பிப்பது போல தோல்வியை நினைத்து தூக்கம் வராமல் தவிக்கும் திமுக தலைவர் தங்களது ஆட்சிக்காலத்தில் பயன்படுத்திய தேர்தல் முறையையே குறை சொல்லி புற முதுகோட பார்ப்பது வெட்கக்கேடு அல்லவா?’’என  தெரிவித்துள்ளது.