டி.டி.வி.தினகரன் விரைவில் மாமனார் ஆகப்போகிறார். அவரது ஒரே மகள் ஜெயஹரிணிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் சம்பந்தம் பேசி சிறையில் இருந்தபடியே தன் உறவினர்கள் மூலம் இந்த திருமணத்தை பேசி முடித்துள்ளார் சசிகலா. 

பாரம்பரியமிக்க துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தின் மீது சசிகலா நன்மதிப்பை வைத்துள்ளார். இந்தக் குடும்பத்தினர் கல்லூரிகளை நடத்தி கல்வி சேவை புரிந்து வருகிறது. இருவருக்கும் ஜாதக கட்டங்களும் பொறுந்திப்போக இரு தரப்பும் ஏகமனதாக இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பாண்டிச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டுக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தினர் சென்று எளிய முறையில் நிச்சயம் நடத்தி உள்ளனர். 

அப்போது டி.டி.வி.தினகரன், சின்னம்மா சசிகலா வந்த பிறகு அவரது தலைமையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனக்கூறி இருக்கிறார். நிச்சயம் நடத்திவிட்டு சசிகலா வெளியில் வந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளிவரலாம் என அவரது உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா ரிலீசாக முன்பின் தாமதமானாலும் எப்படியும் ஜனவரிக்குள் வந்து விடுவார் என்பதால் திருமணத்தை ஜனவரி மாதம் தஞ்சையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  சசிகலா காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல தொடர்புடையவர். டி.டி.வி.தினகரனும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார்.