Asianet News TamilAsianet News Tamil

தெலுங்கானா தெறிக்கவிடப்போவது யார்? எந்த கூட்டணி தெறித்து ஓடும்?

தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும், காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி அடையும் என 
 என்று டைம்ஸ் நவ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

TRS expected to win 79 to 91 seats in the 119-member house
Author
Telangana, First Published Dec 7, 2018, 8:00 PM IST

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.  தெலங்கானா மாநில பிரிப்புக்கு பின் முதன்முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகிறார்கள் என  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி உள்ளன.  

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு 66 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 37 இடங்களும், பாஜகவுக்கு 7 இடங்களும், மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios