Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அதகளம்... 3 தொகுதிகளில் பாஜகவை வீழ்த்தி வெற்றிகொடி நாட்டினார்!

இந்த இடைத்தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், திரினாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜகவே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. அதேவேளையில் இந்த மூன்று தொகுதிகளிலும் சிபிஎம்-காங்கிரஸ் கட்சிகள் மிக மோசமானத் தோல்வியைச் சந்தித்துள்ளன.

Trinamool congress won 3 constituencies in west bengal byelection
Author
West Bengal, First Published Nov 28, 2019, 9:55 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.Trinamool congress won 3 constituencies in west bengal byelection
மேற்கு வங்க மாநிலத்தில் காரக்பூர் சர்தார்,  கலியாகஞ்ச், கரீம்பூர் ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தன. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 25 அன்று நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்காரைவிட 2, 418 வாக்குகள் கூடுதலாகப் பெற்று திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தபன் தேப் சின்ஹா வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திரினாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.

Trinamool congress won 3 constituencies in west bengal byelection
பாஜக வசம் இருந்த கராக்பூர் சதார் தொகுதியில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் பிரேமசந்திர ஜாவை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்க்கார் 20, 811 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பிரதீப் சர்க்கார் வெற்றி பெற்றார். கரிம்பூரில் பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைவிட 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிமாலென்டு சின்ஹா ராய் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.Trinamool congress won 3 constituencies in west bengal byelection
 இந்த இடைத்தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், திரினாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜகவே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. அதேவேளையில் இந்த மூன்று தொகுதிகளிலும் சிபிஎம்-காங்கிரஸ் கட்சிகள் மிக மோசமானத் தோல்வியைச் சந்தித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios