மேற்கு வங்கமாநிலத்தில்  துர்கா பூஜை பண்டிகைக்கான தயாராகியுள்ள பாடலுக்கு  இரண்டு பெண் எம்பிக்கள் நடமாடியுள்ள காட்சிகள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவிவருகிறது மிக நளினத்துடன் அவர்கள் ஆடியுள்ளதே அதற்கு காரணம். 

தமிழகத்தில் ஆண்டு தேறும் நவராத்திரி விழா நடப்பதுபோல, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை  பண்டிகை நடப்பது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டு துர்கா பூஜை பண்டிகை  ஒரு வாரகாத்திற்கு நடைபெற உள்ளது, அதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது. பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட மக்கள் தயாரிகி வருகின்றனர். இந்நிலையில்  தனியார் நிறுவனம் ஒன்று துர்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில்  பாடல் ஒன்றை தயாரித்துள்ளது. 

இந்நிலையில் அந்த பாடலுக்கு மேற்குவங்க நடிகைகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுமான நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரபர்த்தி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சியை நடத்தியது. 

அவர்களின் நடனத்தை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதில் பெண் எம்பிக்கள் அந்த பாடலுக்கு மிக நளினத்துடனும் அபிநயத்துடனும் உடலை வளைத்து நெளித்து ஆடி பார்வையாளர்களை பரவசமூட்டினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி டெரெண்டாகி வருகிறது.