ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது, அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யாவை கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மகன் சூர்யா. இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கடந்த மே 8ம் தேதி அக்கட்சியில் இணைந்தார். பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக சூர்யா இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 11ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சூர்யாவின் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த அன்று இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இருதரப்பை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பியிருக்கின்றனர். அப்போது ஆம்னி பேருந்து சார்பில் உரிய இழப்பீடு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காரை சரி செய்வதற்கான பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு பேருந்தை எடுத்துச் சென்று சூர்யா மிரட்டி வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் நேற்று சூர்யாவைக் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம்,எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.

Scroll to load tweet…

ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது, அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யாவை கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதே வரலாறு.. அதிமுகவை மறைமுகமாக சாடும் முதல்வர் ஸ்டாலின்.!