திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதே வரலாறு.. அதிமுகவை மறைமுகமாக சாடும் முதல்வர் ஸ்டாலின்.!
இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டு உள்ளோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை.
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;- இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டு உள்ளோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை.
அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம் என்றார். மேலும், பேசிய முதல்வர் இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக - சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக – இன்னும் நாம் பெருமையோடு பேசிக் கொண்டிருக்கிறோமே, ‘திராவிட மாடல்’-இல் நடைபெறும் திருமண விழாவாக இந்தத் திருமண நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கிறது.
இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் இருக்கிற இடத்தில் எப்போதும் விசுவாசமாக - நன்றி உணர்வோடு இருந்து பணியாற்றுபவர் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் எம்.ஜி.ஆருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அதைத்தொடர்ந்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இன்றைக்கு என்னுடைய தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு - கடமையாற்றி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஒற்றை தலைமை விவகாரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுகவில் பொதுக்குழுவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சால் பரபரப்பு..!