trichy siva condemns kiran bedi

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அத்துமீறி செயல்படுவதாக திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் திருச்சி சிவா எம்.பி., இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்திற்க எதிராக தமிழக அரசு மௌமான உள்ளது என்று கூறினார். மத்திய அரசின் கண் அசைவின்படி தமிழக அரசு செய்லபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை எனவும், அதிமுக பேரம் குறித்து ஆதாரத்துடன் பேச திமுகவிற்கு அனுமதி மறுத்து உள்ளனர் என்றார். திமுக உறுப்பினரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருப்பதால் பண பேரம் உண்மை என்பது தெரியவந்துள்ளது என்றார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாகத்தான் இருக்க வேண்டும் என்றார். ஆனால் ஆளுநர் கிரண்பேடி அத்துமீறி செயல்படுகிறார் என்றும், மோதல் போக்கை கைவிட வேண்டும் என்றும் திருச்சி சிவா எம்.பி. அப்போது செய்தியாளர்களிடையே கூறினார்.