திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர்களை பொதுமக்கள் சூழ்ந்து கேரோ செய்ததால் அவர்கள் அலறி அடித்து ஓடினர்.
 முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் நிலையே மாறிப்போனது. மக்கள் மத்தியில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வர அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயற்சி எடுத்ததால் எதிர்ப்பு கிளம்பியது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் போது 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் ஊருக்குள் நுழைய நலத்திட்ட உதவிகள் வழங்குவது போல் அமைச்சர்கள் ஊருக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருச்சிக்குள் அமைச்சர் பட்டாளத்துடன் அவந்த விஜயபாஸ்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேரோ செய்தனர் இதனால் பொதுமக்களை பார்த்து அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர். 

டேய் ஓடுகிறார்கள் பாருடா ஓட்டு கேக்க இங்கத்தான வரணும் என்று பொதுமக்கள் கூச்சலிட்டனர்.