Asianet News TamilAsianet News Tamil

3வது நாளாக நீடிக்கிறது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி.. இன்று மாலை முக்கிய முடிவு.

தமிழகம் முழுதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 

Transport workers' strike continues for 3rd day .. Public suffering .. Key decision this evening.
Author
Chennai, First Published Feb 27, 2021, 12:23 PM IST

தமிழகம் முழுதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். விரைவில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் அரசு கோரிக்கை வைத்துள்ளன.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Transport workers' strike continues for 3rd day .. Public suffering .. Key decision this evening.

இதனால் சுமார் 80க்கும் அதிகமான பேருந்துகள் இயங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகளும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி இருந்த பொதுமக்கள் வாடகை கார், வேன், ஆட்டோக்களில் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகம் தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 25ஆம் தேதி இரவு நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால நிவாரணம் 1000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். மேலும்  கோரிக்கை தொடர்பாக முதல்வருடன்பேசுவதாகவும், அமைச்சர் தெரிவித்திருந்தார். 

Transport workers' strike continues for 3rd day .. Public suffering .. Key decision this evening.

ஆனால் இடைக்கால நிவாரணத்தை முடியாது என  தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும், தொழிற்சங்கத்தினர் கூறியுள்ள நிலையில், அவர்களுக்கு போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அறிவித்துள்ளது. எனவே தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று  மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுமா அல்லது போராட்டம் மேலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios