டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்த திருநங்கையாக அப்சராவுக்கு காங்கிரசில் மிக பெரிய பொறுப்பான தேசிய மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லண்டன் சென்று, அங்கு ஜர்னலிசம் படித்து முடித்து, இந்தியா திரும்பிய அப்சரா பல ஆங்கில செய்தி நிறுவனத்தில் பணி புரிந்து சாதனை படைத்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பல சாதனை புரிந்தவர். 

வெற்றி நாயகியாக பார்க்கப்பட்ட அப்சரா,மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக  பிரபலம் அடைந்தார். திருநங்கையாக அறியப்படும் அப்சரா ஆரம்ப காலக்கட்டத்தில் பாஜவில் இருந்தார். அங்கிருந்து வெளியே  வந்தவுடன் அதிமுகவில் காத்திருந்தது அழைப்பு. 

சசிகலா துணையோடு, ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னே  கட்சியில் இணைந்தார். பின்னர் ஜெயலலிதா இறப்பு, சசிகலா ஜெயில், டிடிவி தினகரன் புதிய கட்சி என சில மாற்றங்கள் வரவே, தினகரனின் அமமுக கட்சியில் இருந்து வந்தார். இருப்பினும், ஆரம்பம் முதலே தினகரனுடன் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

தினகரனை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்  இல்லாமல் இருந்தார் அப்சரா. அதே வேளையில், அதிமுகவிற்கு   ஆதரவு தெரிவித்தும், தினகரனுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சமீப காலமாக பேசி வந்தார்.

மேலும், அமமுக கட்சியில் ஒரு பெரிய பொறுப்பு வேண்டும் என்ற நிலைப்பாடோடு அப்சரா இருந்ததாகவும், ஆனால் அப்படி கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை உண்டான தருணத்தில், தற்போது  காங்கிரஸ் பக்கம் ஜம்ப் ஆகிவிட்டார்.

அதன் விளைவு  இன்று யாரும் எதிர்பாராத மிகப்பெரும் பொறுப்பான, அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் பதவி! அப்சரா எடுத்து வைத்துள்ள அடுத்தக்கட்ட வெற்றி பாதைக்கு  அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதே  வேளையில் அரசியலில் இதை மிக முக்கியமாக கருதப்பட்டு, பல்வேறு  விமர்சனங்களும் எழுந்து வருகின்றது. இதுவரை மாநில கட்சியில் இருந்து வந்த அப்சரா தற்போது, தேசிய கட்சியில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது