தாயே தாயே தண்ணீரைத் தாயேன் தாயேன் என்று திருவையாறு அருகே காவிரி ஆற்றங்கரையில் டி.ராஜேந்தர் முழங்காலிட்டு தனது வேதனையை பாடலாக வெளிப்படுத்தினார்.

காவிரி நீருக்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் காவிரி மேலாண்மையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. விவசாய அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் தமிழ்நாடு நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மௌன போராட்டம் நடத்தப்பட்டது. 

இவர்களின் இந்த போராட்டத்தால், தமிழகமே கொந்தளித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜந்தர் சென்றார். அப்போது அங்கு காவிரி கரையில் முழங்காலிட்டு பாட்டுப்பாடி தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

அப்போது அவர் தனக்கே உரிய பாணியில், பாட்டுப்பாடி காவிரியின் நிலை குறித்து பாட்டுப்பாடி வேதனையைத் தெரிவித்தார். 

தாயே தாயே காவிரி தாயே தாயே!
தாயேன் தாயேன் தண்ணீரை தாயேன் தாயேன்!
கைகொடுக்க வேண்டும் அம்மா கர்நாடகம்
சில கட்சி இங்க நடத்துதம்மா கபட நாடகம்
எந்த பாவி செஞ்சா... பாதகம் 
எப்ப மாறும் இந்த ஜாதகம்....
தமிழ்நாட்டுக்கு வரும் சாதகம்...

என்று தனது வேதனையை பாடலாக டி.ராஜேந்தர் பாடி வெளிப்படுத்தினார்.