ஜீன் 30ம் தேதி வரை ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உலக நாடுகளை காட்டிலும் குறைவு என்றாலும் 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா கொரோனா பாதிப்பில் அள்ளாடிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவோடு மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரைக்கும் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மே12ம் தேதி ஐஆர்டிசி இணையதளத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று ரயில்வே நிர்வாகம் ஜீன் 30ம் தேதி வரை ரயில் பயணிகள் பதிவு செய்த முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு உரிய பணத்தை அவர்களது வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
சிறப்பு ரயில்கள் மற்றும் ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கையை இந்திய அரசு  எடுத்துள்ளதாக தெரிகிறது.