Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் குடும்பத்தில் நேர்ந்த சோகம்.. பன்னீர் செல்வத்திற்கு சோதனைமேல் சோதனை.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது (61) இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tragedy befell the OPS family. Tragedy and tragedy ,supporters shocking .
Author
Chennai, First Published May 14, 2021, 9:07 AM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது (61) இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலைமிகவும் மோசமடைந்தது. 

Tragedy befell the OPS family. Tragedy and tragedy ,supporters shocking .

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அப்போது ஓபிஎஸ் துணை முதல்வராக இருந் நிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையிலிருந்து பாலமுருகனை சென்னைக்கு அழைத்துவர ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் வழங்கி உதவினார். அதனையடுத்து ராணுவ ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tragedy befell the OPS family. Tragedy and tragedy ,supporters shocking .

அப்போது அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல்போனது. அதையடுத்து திருவனந்தபுரத்தில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்தில் அவர் உயிரிழந்தார். அவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios