முதலமைச்சர் உடல்நிலை குறித்து அறிவிக்க கோரும் டிராபிக் ராமசாமியின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்திலும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வர் உடல்நிலை குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல் வருவதால் முதல்வர் உடல்நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முதல்வர் உடல் நிலை காரணமாக அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது என்று தெரிவித்து உடல்நிலை பற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி முதல்வர் உடல்நிலை விஷயத்தில் பப்ளிசிட்டி தேடும் வகையில் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது , என்று கூறி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திலும் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.