முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி, அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர், விரைவில் கைது செய்யப்ப்படலாம் என தெரிகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு குறித்து, ஏராளமான வதந்திகள் இணைதளம் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் மூலம் பரவியது. இதுதொடர்பாக இதுதுவரை 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு வதந்தி பரப்பியதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது, கிஷோர் கே.சாமி என்பவர் கொடுத்த புகாரின்படி சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக பிரான்ஸ் தமிழச்சி உள்பட ஏராளமானோர் வதந்திகளை பரப்பினர். இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்பு பரிவு நிர்வாகிகள் கொடுத்த நிர்வாகிகள் கொடுத்த புகாரின்படி 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதில் சதீஷ்குமார், மாடசாமி, பாலசுந்த்தரம், திருமேனி செல்வம், ஆன்டனிஜேசுராஜ், ரமேஷ், சுரேஷ், சகாயம் ஆகிய 8 பேரை, சைபர் கிரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசா கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி, அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் முகநூல், வாட்ஸ்அப், யுடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் அவதூறு வதந்தியை பரப்புவதாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் 153, 504,504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனால், டிராபிக் ராமசாமியும், அவரது உதவியாளரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.