குடியரசு தலைவரை நாளை சந்திக்கிறார் டி.ஆர்.பாலு... ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார். 

TR Balu meets president tomorrow regarding governor rn ravi walked out in tn assembly

ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார். நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றும் போது, அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை உச்சரிக்காம் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுக்குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.!

இதனிடையே ஆளுநர் விவகாரத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை காலை 11.45 மணியளவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios