Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் நாளை வாக்கு எண்ணிக்கை... திமுக கை ஓங்கியே இருக்குமா..? அதிமுக மீளுமா...?

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றதாக வேலூர் தேர்தலில் அதிமுக பிரசாரம் செய்தது. கடந்த இரு மாதங்களில் திமுக எம்.பி.களின் பணிகளை பெருமையாகப் பேசி திமுக பிரசாரத்தை முன்வைத்தது.

Tomorrow vellore Vote counting
Author
Vellore, First Published Aug 8, 2019, 10:02 AM IST

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில்  பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுகவின் கை ஓங்கி இருக்குமா அல்லது அதிமுக பழைய நிலைக்குத் திரும்புமா என்பது தெரிய வரும்.Tomorrow vellore Vote counting
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளானர்.Tomorrow vellore Vote counting
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனையடுத்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 2 மணிக்குள்ளாக வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 30 வாக்குச்சாவடிகளில் பதிவான விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்படும் என்பதால், தேர்தம் முடிவு மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள் தேர்தல் அதிகாரிகள்.

Tomorrow vellore Vote counting
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றதாக வேலூர் தேர்தலில் அதிமுக பிரசாரம் செய்தது. கடந்த இரு மாதங்களில் திமுக எம்.பி.களின் பணிகளை பெருமையாகப் பேசி திமுக பிரசாரத்தை முன்வைத்தது.Tomorrow vellore Vote counting
 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி கிடைத்தால், திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது வெளிப்படும். அதிமுக வெற்றி பெற்றால், இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டுள்ளது என்றதோடு, மக்களின் ஆதரவும் அதிமுக கிடைத்துள்ளது; இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று எடுத்துக்கொள்ளப்படும். எனவே இத்தேர்தல் முடிவுகள் மூலம் திமுகவின் கை ஓங்கியே இருக்குமா அல்லது அதிமுக பழைய நிலைக்குத் திரும்புமா என்பது உறுதியாகும். நாளை காலை அதற்கான விடை கிடைத்துவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios