நாளை காலை அனைவரும் சென்னையில் இருக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிரபித்துள்ளார்.

இதனிடையே துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு, வறட்சி, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், ‘நீட்’ தேர்வு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை.

சட்டப் பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்க தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்டுமாறு முதலமைச்சர் மற்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்நிலையில், நாளை காலை அனைவரும் சென்னையில் இருக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.