Asianet News TamilAsianet News Tamil

6 மாதமாக எதிர்பார்த்து ஏமாந்த சென்னை... நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tomorrow is the rain that will be solved
Author
Tamil Nadu, First Published Jun 14, 2019, 4:56 PM IST

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Tomorrow is the rain that will be solved

கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், மழையை நம்பியே சென்னை மக்கள் இருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வானிலை மையத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

Tomorrow is the rain that will be solved

சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆறுதலான வார்த்தையை வெகு நாட்களுக்கு பிறகு கூறி இருக்கிறது. அதேவேளை இன்று அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் அளவு குறையும். தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.Tomorrow is the rain that will be solved

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் இன்று அனல் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios