Asianet News TamilAsianet News Tamil

யாரும் எதிர்பாராத வகையில் துணிச்சலான முடிவை எடுத்த மோடி அரசு... கொந்தளிக்கும் டிடிவி.தினகரன்..!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25ம் தேதி முதல் அவசரகால சேவைகளை எளிதாக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. 

toll gate collection from april 20...ttv dhinakaran Condemned
Author
Tamil Nadu, First Published Apr 19, 2020, 7:56 AM IST

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில்  சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25ம் தேதி முதல் அவசரகால சேவைகளை எளிதாக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

toll gate collection from april 20...ttv dhinakaran Condemned

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டுவிட்டர் பதிவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வரும் 20ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

toll gate collection from april 20...ttv dhinakaran Condemned

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை  மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும்.

இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு,  நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை  சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும்  என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios